Posts

Showing posts from December 8, 2014
புதிய பள்ளிக்கல்வி இயக்குனராக மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்கள் நியமனம் செய்து அரசு உத்தரவு. பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிச்சந்திரன் தெரிவித்தார். புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும், மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த மதிப்புமிகு.இராமேஸ்வரன் முருகன் அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குனர்கள் மாறுதலுக்கான ஆணை தற்சமயம் வெளியானதாக வெளியாகியுள்ளது.
TET-சற்றுமுன்: இன்று உச்சநீதிமன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் வந்தது. இன்று உச்சநீதிமன்றத்தில் GO 71 CHALLENGING வழக்கு சற்றுமுன் 4 APPEAL ADMISSION ற்காக வந்தது. நான்கு BATCHES ம் இதற்கு முன் உள்ள வழக்கோடு TAG ON. செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்கு கொடுக்கப்பட்ட இடைக்கால ஆணை இவ்வழக்குகளுக்கும் பொருந்தும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. Thanks To, Vijayakumar Chennai
சிறப்பாசிரியர்களும் தகுதித்தேர்வு மூலம் நியமனம் என்பது சரியான முடிவல்ல : கருணாநிதி அறிக்கை சிறப்பாசிரியர்களும் தகுதித்தேர்வு மூலம் நியமனம் என்பது சரியானமுடிவல்ல என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறப்பாசிரியர்கள் கேள்வி:- அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த வரிசையிலேதான் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?. பதில்:- அரசுப் பள்ளிகளிலே சிறப்பாசிரியர்களை நியமிக்கும்போது தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேதான் மேற்கொள்ளப்படும் என்றும், வேலைவாய்ப்புப் பதிவு மூப்புக்கு முன்னுரிமை கிடையாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுகாலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் சிறப்பாசிரியர்களையும் அரசுப் பள்ளிகளில் 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பல ஆயிரக்கணக்கான பகுதிநேர சிறப்பாசிரியர்களையும் பெரிதும் பாதிக்கக்கூடிய முடிவாகத்தான் அமையும். மறுபரிசீலனை...