Posts

Showing posts from December 7, 2014
Special Article : வெறும் பாடங்களை போதிப்பதற்காகவா ஆசிரியர்?   சென்னையில், ஒரு பள்ளி வளாகத்தில், ஆசிரியர் ஒருவர் அடி வாங்கியதைப் பார்த்து, அதிர்ந்து விட்டேன். மாணவர் ஒருவர், பள்ளியில் விசில் அடித்ததை கண்டித்ததற்காக, அவருக்கு இந்த பரிசு. இது, கொடுமையின் உச்ச கட்டம்!சில ஆண்டுகளுக்கு முன், வகுப்பறையில் ஆசிரியை ஒருவர், மாணவரால் குத்திக் கொல்லப்பட்டார்.  நம் சமுதாயம், எங்கே சென்று கொண்டிருக்கிறது! மாணவர்களுக்கு, வெறும் பாடங்களை போதிப்பதற்காகவா ஆசிரியர்? இதற்கு, கணினி மற்றும் சி.டி., போதுமே!தன்னிடம் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும், ஒழுக்கத்தையும், நல்ல பண்பையும் எடுத்துச் சொல்பவர் தான் ஆசிரியர். அவருக்கு, மதிப்பு, மரியாதை தர வேண்டும்.  மாணவர்களின் கேலிப்பொருளாக, பல் பிடுங்கப்பட்ட பாம்பாக, இன்றைய ஆசிரியர்கள் வலம் வருவது, நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்.முன்னாள் மாணவர்கள், என் மீது பயமும், மரியாதையும் வைத்திருப்பதை, இன்றும் நான் உணர்கிறேன்; பெருமை அடைகிறேன். அது, நான் பாடம் நடத்தியதற்காக மட்டுமல்ல; என் கண்டிப்பும் முக்கிய காரணம்.மாணவர்கள், ஒழுக்கக்கேடான செயல்களை செய்...
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதிதாக 128 அரசு தொடக்கபள்ளிகள்   256 ஆசிரியர் பணியிடங்கள் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இல்லாத 128 குடியிருப்பு பகுதிகளுக்கு 27 மாவட்டங்களில் புதிதாக 128 பள்ளிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும், புதிதாக கட்டிடங்கள் கட்டவும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு ஒரு இடைநிலை ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வரை மாற்றுப்பணிகள் வாயிலாக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் புதிய கட்டிடம் கட்டப்படும். எனவே தொடக்க கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தை அணுகி போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  அந்த வகையில் தமிழகத்தில் 256 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.19 கோடி 43 லட்சம் செலவா...
கணினி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு டிச.24ல் தொடக்கம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புஅடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 6 மையங்களில் நடைபெற உள்ளது.  வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 24 முதல் 26ம் தேதி வரை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா நேஷனல் மேல்நிலை பள்ளியில் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது.  ஆசிரியர்களுக்கு தனித்தனியே சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.