Posts

Showing posts from December 2, 2014
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மாற்றம் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முக்கியத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த அவர் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனிப்பார். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரிய தலைவராக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளரக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத், அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இயக்குநராக இருந்துவந்த இறையன்பு ஐ.ஏ.எஸ்., பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலராக இருந்த என்.எஸ்.பழனியப்பன், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார். வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். நகர்ப்புற திட்ட
குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விவரங்களைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 21-ஆம் தேதியன்று குரூப் 4 தேர்வை நடத்துகிறது. 4 ஆயிரத்து 963 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தவுள்ளது. இந்தத் தேர்வுக்கென 13 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணைப் பதிந்து, விண்ணப்பம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தைச் சரிபார்த்துக்கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் அதன் விவரம் இணையதளத்தில் இல்லாவி