Posts

Showing posts from December 1, 2014
நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: வருகிறது பல சிறப்பம்சங்களுடன் புதிய 8+4+3 திட்டம் இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்ப...
இடஒதுக்கீட்டில் அலட்சியம் : மாற்றுத்திறனாளிகள் அரசுபணியில் புறக்கணிக்கப்படும் அவலம் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டைதமிழக அரசு முறையாக பின்பற்றாத காரணத்தால் ஒரு சதவீதத்திற்கும் குறைவான நபர்களே பயனடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தமிழக அரசை பொறுத்தவரையில் டிஎன்பிஎஸ்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 3 சதவிதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு பணியிடங்களில் ஆட்கள் தேர்வு செய்யும்போது, 69 சதவித இடஒதுக்கீடு, பெண்களுக்கான 33 சதவித இடஒதுக்கீடு ஆகியவை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதே சமயம் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த நியமனத்தில் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே, இது குறித்து உண்மை அறிய, தலைமை செயலாளரின் தலைமையில் பல துறைகளை சேர்ந்த செயலாளர்களை ஒருங்கிணைத்து 15 பேர் கொண்ட குழுவை அரசு கடந்த 2012ம் ஆண்டு அமைத்தது. இக்குழுவின் முக்கிய வேலை, நான...