உயர் நீதிமன்றத்தின் முன் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் !! சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி மதுரையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எதிரே மாற்றுத்திறனாளிகள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறப்புஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணிவழங்கக்கோரியும், ஆண்டுதோறும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தக்கோரியும் அவர்கள் வலியுறுத்தினர்.
Posts
Showing posts from November 28, 2014
- Get link
- X
- Other Apps
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 2 லட்சம் பேர் விண்ணப்பம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு, சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு இந்த முறை சுமார் 2 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்த முழு விவரம் ஓரிரு நாள்களில் தெரியவரும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை மாவட்டத்தில் 16 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
- Get link
- X
- Other Apps
அஞ்சல் துறை பணியிடங்களுக்குவிண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள, 806 தபால்காரர் மற்றும் மெயில்கார்டு பணியிடங்களுக்கு, இணையம் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அஞ்சல் துறையின் முதன்மை அஞ்சல்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அஞ்சல் வட்டத்தில், அஞ்சலக கோட்டங்கள் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் காலியாக உள்ள, தபால்காரர்- - 797, மெயில்கார்டு - 9 என, மொத்தம், 806 பணியிடங்களுக்கு, இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். சம்பள விகிதம், 5,200 முதல், 20,200 ரூபாய் வரை. மேலும், விவரங்களுக்கு, www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள், டிசம்பர், 7ம் தேதி.இவ்வாறு, செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.