Posts

Showing posts from November 25, 2014
தமிழகத்தில் காலியாக உள்ள உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எப்போது TRB-ஆல் நடத்தப்படும்? தமிழகத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட உதவித்தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.அரசு இதுவரை இப்பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டு முறை அரசாணையும் வெளியிட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்த தேர்வுக்காக பல பட்டதாரிகளும்.,ஆசிரியர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியம் விரைந்து இத்தேர்வினை நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பட்டதாரிகள் மற்றம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு 10 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை!!! விழுப்புரம்: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு எழுத, மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் பெற்றனர். கடந்த 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி எழுத்து தேர்வு வரும் 10.1.2015 அன்று, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடக்கிறது. சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்திலிருந்து போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரப் பெற்றுள்ளது. விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்தில் கடந்த 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் (ஒரு விண்ணப்பம் ரூ.50 விலை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக 11 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் வரவழைத்து, நேற்று வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 26ம் தேதி மாலை 5:00 மணிவரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சரி பார்த்து பெறும் இடத்தில், அதிகமானோர் காத்திருக்கும் நிலை உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளியூர்களில் இரு
பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் உச்சநீதி மன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக்கோரி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு பட்டதாரி சங்கங்கள் பங்கேற்றன. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராம தாஸ் தலைமை தாங்கினார். வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராமு முன்னிலை வகித்தார். உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளை வருமாறு: சான்று சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற உத்தரவுகளின் படி நடைமுறை விதி அரசாணைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆர்எம்எஸ்ஏ திட்டப் பணியிடங்களில் 2011&2012ம் ஆண்டுக்கான பணியிடங்களை பழைய நடைமுறையின் கீழ் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. பின்னர், இந்த கோரிக்கைகள் அனைத்தை யும் மனுவாக தயாரித்து தமிழக முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி முதன்மைச்