Posts

Showing posts from November 21, 2014
உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் திடீர் ஆய்வு  மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுகுறித்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.  அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி நிர்வாகத்தினர் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் திடீர் விசிட் நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 12 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட, தமிழகத்திலுள்ள 1,044 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.  இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்த மாணவர் எண்ணிக்கை மற்றும் அன்றைய தினத்தில் மாணவர்களின் வருகை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், ...
அரசு பள்ளிகளில் பணிபுரிய உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்கள் 1,028 பேர் நியமனம்ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வு நடத்தி பணிக்கு எடுக்கிறது  அரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.  1,028 ஆசிரியர்கள் நியமனம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் என மொத்தம் 1,028 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பணியை தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைத்தது.  பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி ஆசிரியர்தேர்வு வாரிய தலைவர் விபுநய்யர் தலைமையில் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தண்.வசுந்தராதேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் எழுத்துத்தேர்வு நடத்த உள்ளனர்.  இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். எழுத்துத்தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்கள் ஆகும். தேர்வு 95 மதிப்பெண்ணுக்கு 3 மணிநேரம் நடைபெறும். ஆப்ஜ...