"டிஎன்பிஎஸ்சி குரூப் 1': 83 அதிகாரிகள் நியமன விவகாரம்: மத்திய அரசை மனுதாரராகச் சேர்க்க உச்ச நீதிமன்றம் முடிவு தமிழகத்தில் "டிஎன்பிஎஸ்சி குரூப்-1' பிரிவைச் சேர்ந்த 83 அதிகாரிகளின் பணி நியமனத்தில் விதிகள் மீறப்பட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விடைத்தாள்களை ஆராய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (யுபிஎஸ்சி) இந்த வழக்கில் மனுதாரராகச் சேர்க்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் அடுத்த ஆண்டு (2015) ஜனவரிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று யுபிஎஸ்சி செயலருக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் (டிஎன்பிஎஸ்சி) நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 2000-2001ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி "குரூப் 1' தேர்வில் தேர்ச்சி பெற்று 2005-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த 83 அதிகாரிகளின் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட 83 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை தொ...
Posts
Showing posts from November 20, 2014