பள்ளிக்கல்வி - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 24.11.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது
Posts
Showing posts from November 19, 2014
- Get link
- X
- Other Apps
அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துக்கு தடை - மதுரை ஐகோர்ட் தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் கலெக்டர்கள், திட்ட அலுவலர்கள் நியமன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 2013 ஆக., 28ல் அரசு உத்தரவில், 'மாவட்ட வாரியாக, நேர்காணல் மூலம் மட்டுமே பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்' என, உள்ளது. தற்போதைய பணி நியமன நடைமுறையில், மாவட்டந்தோறும் எத்தனை பணியாளர்கள் நியமிக்க உள்ளனர்; இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுமா என்ற விவரங்களை தெளிவுபடுத்தவில்லை. நேர்காணலுக்கு முன்பே யார் யாரை நியமிப்பது என, அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அங்கன்வாடி பணியிடங்களை பொது அறிவிப்பின்றி, நேர்காணல், வசிப்பிடம் அடிப்படையில் தேர்வு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பொது அறிவிப்பு வெளியிடாமல், இடஒதுக்கீடு பின்பற்றாமல் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமனம் செ...
- Get link
- X
- Other Apps
நவ., 25, 26ல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது. இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் இத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நியமன கலந்தாய்வும் இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நவ., 25, 26ல் நடக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இவ்வலுவலகத்தால் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அசல் கல்வி சான்றுகளுடன் காலை 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
- Get link
- X
- Other Apps
"நெட்' தேர்வு முடிவு வெளியீடு பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு முதுநிலை பட்டப் படிப்பை முடித்து, ஆராய்ச்சிப் படிப்பை (பி.எச்.டி.) முடித்திருக்க வேண்டும். அல்லது முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' தகுதித் தேர்வு அல்லது மாநில அளவில் நடத்தப்படும் "செட்' தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதில் "நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தி வந்த இந்தத் தேர்வை, இப்போது 2014 டிசம்பர் மாதம் முதல் சி.பி.எஸ்.சி. (மத்திய இடநிலை கல்வி வாரியம்) நடத்துகிறது. இந்த நிலையில், 2014 ஜூன் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவுகளை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் www.ugcnetonline.inஎன்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.