Posts

Showing posts from November 15, 2014
FLASH NEWS : புதிய பள்ளி கல்வித்துறை துணை செயலாளர் -தமிழக அரசு உத்தரவு தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, சுபோத்குமார் பள்ளி கல்வித்துறை துணை செயலாலராகவும், கே.எஸ்.கந்தசாமி மற்றும் ஷில்பா பிரபாகர் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாகவும், பிங்க்ளே விஜய் மாருதி தொழிற்துறை இணை செயலாளராகவும், கே.விஜயகார்த்திகேயன் கோவை மாநகராட்சி கமிஷனராகவும், பிரவீன் பி.நாயகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்
உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் வெளியீடு அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.  அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள இடங்களில் 1,093 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை டிஆர்பி மேற்கொண்டு வருகிறது. இதுவரை ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயிரின வளர்ப்புப் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இறுதித் தேர்வுப் பட்டியலை டி.ஆர்.பி. வெளியிட்டிருந்தது.  கணிதம், இயற்பியல், இயற்பியல் - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் அறிவியல் - எலெக்ட்ரானிக் தகவல் தொடர்பியல், புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான இறுதித் தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வரலாறு, சுற்றுலா, சுற்றுலா-பயண மேலாண்மை பாடப் பிரிவுகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியலை டி.ஆர்.பி. இப்போது வெளியிட்டுள...