Posts

Showing posts from November 13, 2014
புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் தி்ட்டமிட்டபடி குழந்தைகள் தின விழா நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கணினி பட்டதாரிகள் பட்டியல் வெளியாவது எப்போது? கணினி ஆசிரியர்களுக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியாவது எப்போது என்ற எதிர்பார்ப்பில், பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி பட்டியல் கிடைத்ததும், வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மாநில பதிவு மூப்பு அடிப்படையில், 652 கணினி ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, பதிவு மூப்பு பட்டியல் பெறபட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், கணினி பி.எட்., பட்டதாரிகளின் சான்றிதழ் நகல்கள், கடந்த 3ம் தேதி வரை பெறப்பட்டுள்ளன.  இதுகுறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கூறுகையில், 'பரிந்துரை பட்டியல் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து கிடைத்ததும், மீண்டும் அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்.
FLASH NEWS:தொடர் மழை பள்ளி &கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.  தொடர்மழை காரணமாக 1.சென்னை, 2.காஞ்சிபும், 3.திருவாரூர், 4.நாகை, மற்றும் புதுச்சேரி மாநிலத்தில்(பள்ளி) &காரைக்கால் பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.மேலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் அந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர்கள் நியமனம்: மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மீது புகார்! தமிழக அரசு சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்கு நடத்திய பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் கல்விக்கான உரிமை சட்டத்தின் பிரிவுகள் மீறப்பட்டுள்ளன என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.  இது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.ராஜாராமன் எழுதியுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வகுத்துள்ள ஆசிரியர் கல்வித் தேர்வில் ஆசிரியர் நியமனத்துக்கு குறைந்தது 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மீறி தமிழக அரசு 55 சதவீதமாகக் குறைத்ததுடன் ‘வெய்ட்டேஜ்’ என்ற புதிய நிபந்தனையை அறிமுகப்படுத்தி 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, ஆசிரியர் பட்டப் படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப் பெண்களுக்கு முறையே 10 சதவீதம், 15 சதவீதம், 15 சதவீதம் மதிப்பெண் வழங்கி யுள்ளது.  இவை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நெறிமுறைகள் மற்றும் கல்விக் கான உரிமை சட்டத்தின் பிரிவுகளை மீறிய நட