Posts

Showing posts from November 12, 2014
குரூப் - 4 தேர்வு இன்று கடைசி நாள் குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் .  டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்), தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, 5,000 இடங்களுக்கு, டிசம்பர் 21ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது. இதற்கு, அக்டோபர் 14ம் தேதி முதல், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு, இன்று கடைசி நாள். இன்று நள்ளிரவு, 12:00 மணி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்த, 14ம் தேதி கடைசி தினம
கல்வி கொள்கையில் மாற்றம்: மத்திய அரசு புதிய முயற்சி : துணைவேந்தர் பேச்சு  காந்திகிராமம்: ''கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது,'' என காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார். மவுலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வியியல் துறை சார்பில் தேசிய கல்வி தின கருத்தரங்கு காந்திகிராம பல்கலையில் நடந்தது.  கல்வியியல் துறைத்தலைவர் ஜகிதாபேகம் வரவேற்றார். புதுக்கோட்டை அன்னை கதீஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் சலீம் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி துணைவேந்தர் பேசியதாவது: கல்வி கொள்கையில் மாற்றங்களை கொண்டுவர மனிதவள மேம்பாட்டுத்துறை முயற்சித்து வருகிறது.  கல்வியியல் தகுதி மேம்பாட்டிற்காக ஓராண்டு படிப்பான பி.எட்., எம்.எட்., இரண்டு ஆண்டுகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து வகை கல்வியியல் கல்வியையும் பல்கலையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதை விட திறன் மேம்பாட்டிற்கும், பல்கலைகள் தொழிற்கல்விக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.  ஆரம்ப கல்...