ஆசிரியர் நியமன தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து வழக்கு; மனுவின் மீதான விசாரணையின் முடிவையொட்டி அதன் அடிப்படையில் நியமனங்களை செய்ய வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு ஆசிரியர் நியமன தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீது 6 வாரத்துக்குள் பதில் அளிக்கும் படி தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்குஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்ற லாவண்யா என்பவர் மற்றும் பலர் ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:– தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ம...
Posts
Showing posts from November 11, 2014
- Get link
- X
- Other Apps
TNTET: உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே வருங்காலத்தில் ஆசிரியர் பணி நியமனம்! ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 67 பேர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசின் இரண்டு அரசாணைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த அனைத்து தேர்வாளர்களுக்கும் அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனுதாரர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பலரும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு சாதகமாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் 6 வாரத்தி...
- Get link
- X
- Other Apps
PGTRB- விண்ணப்பம் விற்பனை தொடங்கியது: 2¾ லட்சம் விற்கும் என்று எதிர்பார்ப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 1,807 பேர் எழுத்துத்தேர்வு மூலம்தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். தேர்வுக்கான விண்ணப்பம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். சென்னையில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. முதுகலை பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் வந்து விண்ணப்ப படிவத்தை வரிசையில் நின்று பெற்றுச்சென்றனர். இந்தபடிவம் 26-ந்தேதி வரை வழங்கப்படுகிறது. அன்றுதான் பூர்த்தி செய்த படிவத்தை சமர்ப்பிக்கவும் கடைசி நாள். இந்த படிவம் 2 லட்சத்து 75 ஆயிரம் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு வருகிற ஜனவரி மாதம் 10-ந்தேதி நடைபெறுகிறது.