Flash News: ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கு 4 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு GO 71 மற்றும் GO 25 ஆகியவற்றை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தனர் இதில் 67 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தமிழக அரசு 4 வாரகாலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் இறுதி தீர்ப்பை பொறுத்து பணிநியமனங்கள் அமையவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Posts
Showing posts from November 10, 2014
- Get link
- X
- Other Apps
TNTET :சுப்ரீம் கோர்ட்டில் GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. முக்கியச்செய்தி: சுப்ரீம் கோர்ட்டில் இன்று GO 71 and GO 25எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும். சலுகை சம்பந்தமாக இருவேறுபட்ட தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் உள்ளதால் அரசு தொடந்து எந்த பணிநியமனமும் இனி செய்யமுடியாது. எனவே அரசு அப்பீலுக்கு இங்கு வரும்போது அவ்வழக்கும் இத்துடன் சேர்த்துவிசாரிக்கப்படும்.ஏற்கனவே தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும். Supreme court case appeared. Lawyer msg. Full detailed: SLP no.29245 of 2014 etc cases filed by Lavanya and others challenging the order of 2nd bench of Madras High court(AgnihotriJ & MMSJ) DT 22.09.2014 reg GO 71 dt 30.05.2014 awarding of weightage marks and GO 29 DT 14.02.2014 for 5% relaxation for selection to the post of BT Assistant and Secondary grade Teacher.Honble Supreme Cou...
- Get link
- X
- Other Apps
அரசு வேலையை உதறிய 2,000 பகுதிநேர ஆசிரியர்கள்:பணி நிரந்தரம் ஆகாததால் கடும் விரக்தி ! அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவந்த, 2,000 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 500 பேர், பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். வாரத்தில், மூன்று அரைநாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், இவர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பணி என்பதால், ஒருசில ஆண்டுகளில் பணி நிரந்தரமாகி விடும் என நினைத்து, நல்ல சம்பளத்தில் இருந்த பலரும் அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர ஆசிரியர் பணியில் சேர்ந்தனர். உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசைஆசிரியர் உள்ளிட்டோரும், இந்தப் பகுதிநேர பணியில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு நிதியில் இருந்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் வழங்கி வருகிறது. பணியில் சேர்ந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும், பணி நிரந்தரமாவதற்கான அறிகுறி தெரியாததால், பலரும் விரக்தி அடைந்தனர். பகுதிநேர ஆசிரியர் அமைப்புகள், தமிழக அரசிடம் பலமுறை முறையி...
- Get link
- X
- Other Apps
முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல் ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது ! அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக 'பாஸ்' மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது. அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்குமேல் எடுத்தால்தான் 'பாஸ்' செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது. இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. (Refer para 9 (c) minimum elgibility mark) ...
- Get link
- X
- Other Apps
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு : இன்று முதல் விண்ணப்பம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கானவிண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நவம்பர் 10 முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னையில்?.. சென்னை மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தெரிவித்தார். விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.