Posts

Showing posts from November 5, 2014
கோப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அறிவுரைகளை உடனுக்குடன் அமல்படுத்துவதையும் அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா உத்தரவு
இடைநிலை ஆசிரியர்களின் பணிநியமன கலந்தாய்வு வரும் சனிக்கிழமை 8ம் தேதி நடைபெறும் சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிட கலந்தாய்வு வரும் நவம்பர்8 சனிக்கிழமை ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்ட இடங்களில் காலை 9மனிக்கு கலந்தாய்வில் பங்கேற்று பணிக்கான ஆணையை பெற்றுக்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
முக்கிய செய்தி: தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது   சென்னை:தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக, 4ஆம் தேதி மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  அதேபோல், இந்த ஆண்டு 1,800 முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும். முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய சிறப்பு எழுத்து தேர்வு நடத்தப்படும்.  தேர்வுக்கு 150 மார்க்குகளும், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிக்கு 4 மார்க்குகளும், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மார்க்குகளும் வழங்கப்படும். மொத்தத்தில் 157 மார்...