Posts

Showing posts from November 2, 2014
FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை நோட்டிஸ் நகல் 5% மதிப்பெண் தளர்வு மூலம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ள திரு பாரதி ராஜா என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றுள்ளார்.  தற்போது பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட SC ST ஆசிரியர் பட்டியலில் 90 க்கு மேல் பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு இருந்தது மேலும் 90 க்கு மேல் பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.  இதனால் ஆசிரியர் நியமனத்தில் தமிழ் நாடு அரசை பின்பற்றும் பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வுடன் இல்லை. எனவே இந்த பணியிடங்களுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார்.  சென்னை உயர்நீதிமன்றம் பாண்டிச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றிற்கு பணியிடங்கள் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ் source www.gurugulam.com
கல்வித்துறைக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: நிலுவையில் 2,000 வழக்குகள் இருப்பதால் சிக்கல் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள்அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர், 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கல்வித்துறையில் பணி புரிகின்றனர்.  பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோ என்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது. வழக்குகள் எண்ணிக்கை : பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பணிகளைக் கூட, மாவட்ட கல்வி அதிகாரிகள், சரியாக செய்வதில்லை என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதன் காரணமாக, நாளுக்கு, நாள், கல்வித்துறைக்கு எதிராக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வழங்கும் தீர்ப்புகளை, உடனுக்குடன் அமல்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிகாரிகள் ஆஜராகி, நீதிபதிகளின் கேள்விகணைகளுக்கும் ஆளாகி வருக