கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள் 'கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில்மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர். இந்த வேலை தொடர்பாக, டி.ஆர்.பி., விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை. எனவே, பதிவுதாரர்கள், டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
Posts
Showing posts from October 31, 2014
- Get link
- X
- Other Apps
தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 பள்ளிகளுக்கானதலைமையாசிரியர் பணியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பிய இடங்களில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.