ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழக்கு : பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகினார் சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில், ‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும். ஆனால், சில ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டதால், பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீண்ட கால பணி செய்துள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அந்தஸ்து வழங்க உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர்கள் சிலருக்கு மட்டுமே சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உள்ளிட்ட அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவை நேரில் ஆஜராக உத்...
Posts
Showing posts from October 27, 2014
- Get link
- X
- Other Apps
ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி ஆசிரியர்கள் பட்டியல் மற்றும் பிரமலைக்கள்ளர் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் செய்யவும் இடைக்கால தடை அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகள், அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலைமணி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில் கூறி இருப்பதாவது:– அரசு ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 669 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளன. இதேபோல் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 64 இடைநிலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளது. அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை பொருத்தமட்டில் ஆதிதிராவிடர், அருந்ததியினர் ஆகிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. அரசியல் அமைப்பின் சட்டப்படி இட ஒதுக்க...
- Get link
- X
- Other Apps
அக்.30 -ம் தேதிக்குள் தரம் உயரும் 50 உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியல் வெளியீடு & கலந்தாய்வை நடத்த அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதி -பள்ளிக்கல்வி இயக்குநர். பள்ளிக்கல்விஇயக்குநரின்உறுதியைஏற்றுஅக்.29ம் மாவட்டத் தலை நகரங்களில் நடைபெறுவதாக இருந்தகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: பள்ளிக்கல்வித்துறையால் தரம் உயரும் 50 உயர்நிலைப்பள்ளிகளில் பட்டியலை வெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் உயர்நிலைப்பள்ளி உடனடியாக நேர்மையான முறையில் கலந்தாய்வை நடத்த வேண்டும். தமிழகம் முழுதும் காலியாக உள்ள 600 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களைஉடனநிரப்பவேண்டும். 2ஆண்டுகள்கடந்தபிறகும்எம்பில்-உயர்நிலைக்கல்விக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு எனஅரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும்