கணினி பயிற்றுனர் பணிக்குபதிவு மூப்பு பட்டியல் வெளியீடு. பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; தமிழக பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள 652 தொழிற்கல்வி கணினி பயிற்றுநர் பணி காலியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ளது. இதற்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பி.எஸ்சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில் நுட்பத்துடன் பி.எட்., முடித்திருக்க வேண்டும்.முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைத்து பதிவுதாரர்களும், முன்னுரிமையற்ற பிரிவில் எஸ்.டி., பிரிவினர் 3.9.2011 வரையிலும், எஸ்.சி.,அருந்ததியினர் 20.12.2010 வரையிலும், பி.சி., முஸ்லிம் 17.8.2009 வரையிலும், எஸ்.சி.,-எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட இதர பிரிவினர் 22.8.2008 வரையிலும் பதிவு செய்துள்ளவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அல...
Posts
Showing posts from October 25, 2014
- Get link
- X
- Other Apps
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்திநிரப்ப வேண்டும்,' எனதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. அதன் மாவட்ட தலைவர் சந்திரன் கூறியதாவது:மாநிலத்தில் 100 அரசு பள்ளிகள் மேல் நிலையாக தரம் உயர்த்தப்பட்டன. அவற்றில் ஏற்பட்ட 900 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. பதவி உயர்வு மூலமும் 200 தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. இந்த 1100 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அரையாண்டு தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு அறிவிப்பிற்கு முன்னதாக இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்தி நிரப்ப வேண்டும், என்றார்.