Posts

Showing posts from October 23, 2014
தமிழகத்தில் குறைந்த கல்வித்தகுதியில் வேலை பார்க்கும் ஒரு லட்சம் ஆசிரியர்கள் தமிழகத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் குறைந்த கல்வித்தகுதி உடையவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்த்து 5 லட்சத்து 8 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஒரு லட்சத்து 14 ஆசிரியர்கள் பிளஸ்–2 மற்றும் அதற்கு கீழ் தகுதி உடையவர்கள் என தெரிய வருகிறது. கல்விக்கான மத்திய மாவட்ட தகவல் திட்டம் மூலம் 2013–14 சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 80,659 ஆசிரியர்கள் பிளஸ்–2 கல்வி உடையவர்கள் என்றும், 33,679 ஆசிரியர்கள் இடை நிலை கல்வி (10–ம் வகுப்பு) கல்வி தகுதி பெற்றவர்கள் என புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 391 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 12 பேரும் உள்ளனர். எம்.பி.எல் மற்றும் பி.எச்.டி டாக்டர் தகுதி 37,624 பேர் தகுதியுடன் இருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. பிளஸ்–2 படித்து 2 வருடம் ஆசிரியர் பயிற்சி முடித்து தகுதி பெற்றவர்கள் மீண்டு...
ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவில் உள்ள குறைகளை சரிசெய்ய வாய்ப்பு இணையத்தில் ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்ததில் ஏற்பட்ட குறைகளை சரி செய்ய வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை அவர்களே இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளவும், பதிவினை புதுப்பித்து கொள்ளவும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவுதாரர்கள் பதிவேற்றம் செய்துள்ள பதிவு விவரங்களில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரியவருகிறது. எனவே www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவு அடையாள அட்டையினை பதிவிறக்கம் செய்து குறைபாடு ஏதுமிருப்பின் பதிவிறக்கம் செய்து, அந்த ‘பிரின்ட் அவுட்’ குறைபாடுகளுக்குரிய சான்றிதழ்கள் குடும்ப அடையாள அட்டை மற்றும் சாதி சான்றுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலவலகத்தில் நேரில் சென்று சரி செய்து கொள்ளலாம். தற்போது சிறப்புநேர்வாக பி.எஸ்சி.,(கணினி அறிவியல்), பி.எஸ்சி.,(தகவல்தொழில்நுட்பம்) மற்றும் பி.சி.ஏ., பட்டப்படிப்புடன் பட்...
PGTRB: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு. முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்கு னர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.இந்த நிலையில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின்விவரம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) இப...