Posts

Showing posts from October 22, 2014
"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. http://cbsenet.nic.in/cbsenet /Welcome.aspx என்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் சமர்ப்பிக்க நவம்பர் 15 கடைசித் தேதியாகும். அறிவிக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 18 கடைசித் தேதியாகும். "ஆன்-லைன்' விண்ணப்பத்தை நவம்பர் 19-ஆம் தேதிக்குள் பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதி எடுத்த விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 25 கடைசித் தேதியாகும்.
ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் <ஆசிரியர் பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்கப்பட்டுள்ளது. நிய மனம் செய்யப்பட்டவர்கள், தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இணையதளத்தில் தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து வரிசை எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, அவர்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; ஒரு வர் மூன்று முறை, தகுதி சான்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்கள், இணையதளம் வாயிலாக, தங்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொண்டனர்; இன் னும் பல ஆசிரியர...