Posts

Showing posts from October 19, 2014
பதிவுமூப்பு அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் :  வரும் காலத்தில் கணினி ஆசிரியர்கள் போட்டித்தேர்வு மூலமே நியமிக்கப்படுவர் - அரசு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாநில அளவிலான பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் 652 கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.  இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட் டுள்ளது.தமிழ் வழியில் படித்தவர்க ளுக்கு அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. அதன்படி, மொத்த முள்ள 652 காலியிடங் களில் 138 இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. 156 காலியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு (30 சதவீதம்) செய்யப்பட்டுள்ளன.  கணினி ஆசிரியர் பணிக்கு பிஇ (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ, பிஎஸ்சி (இன்பர்மேஷன் டெக்னாலஜி) இவற்றில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு டன் பிஎட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.  கணினி ஆசிரியர் நியமனத் துக்கான அறிவிப்பு வெளியாகி ஓரிரு வாரங்கள் ஆகியும் இடஒதுக்கீட்டுடன் கூடிய காலியிடங்களின் பட்டியல...
2010, ஆகஸ்ட் 23-க்கு முன்னதாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு "டெட்' தேர்ச்சி அவசியம் இல்லை : கடந்த 2010, ஆகஸ்ட் 23-க்கு முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று, 2011-ஆம் ஆண்டில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் விளக்கமளித்துள்ளது.  இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் பிறப்பித்துள்ள உத்தரவு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்ட பிறகு, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு, நியமனம் பெற்ற 5 ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.  இதனடிப்படையில், 2010-11-ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி (தமிழ்) ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, நியமன ஆணைகள் வழங்கப்பட்டாலும், நியமனம் பெற்ற 5 ஆண்டுகளுக்குள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  ஆசிரிய...
சி-டெட் (CTET) தேர்வு முடிவு வெளியீடு கேந்திரீய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், திபெத்திய பள்ளிகள் மற்றும் யூனியன் பிரதேச அரசின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.   சி-டெட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடத்தியது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 7 ஆயிரம் பேர் தேர்வில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், சி-டெட் தகுதித்தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.