சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை மாணவர்களின் கல்வி தரம் பாதிக்காமல் இருக்க, பதிவு மூப்பு அடிப்படையில்,ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என, ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தஞ்சாவூரில் நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப் பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு, மாவட்ட தலைவர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தானர். பதிவு மூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரி பார்ப்பை முடித்து, நிலுவையில் உள்ள, 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 700 பட்டதாரி தமிழாசிரியர்களுக்கும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி வேலை வழங்க வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு, இரண்டு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதனால், பாதிப்படைந்த பட்டதாரி ஆசிரியர்கள் நிலையை கருதி, தாமதம் இன்றி வேலை வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனா...
Posts
Showing posts from October 8, 2014
- Get link
- X
- Other Apps
தகுதித் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வுஅறிவிப்பிற்காக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வில்லை. இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பணி நியமனத்தில் குளறுபடியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் முதல்தலைமுறையினர், இட ஒதுக்கீட்டு பிரிவினர் ஆகியோருக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், இந்திய மாண வர் சங்கம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆகியவை இணைந்து இன்று சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனங்களின் போது வெயிட்டேஜ் முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனால் முதல்தலைமுறையினர், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை கடை பிடிக்கும் போது வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தோன்றுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்கும் தொடர்ந்து நடப்பதால் பணி நியமனத்தில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதற்கு உரிய...