TET ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல்!!! ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை யில் இடைநிலை ஆசிரியர், பட்ட தாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சிகட்டாயமாக்கப் பட்டு இருக்கிறது. தகுதித் தேர் வில் தேர்ச்சி பெற முதலில் 90 மதிப்பெண் (150-க்கு) என்றும் பின்னர் இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து 82 மதிப்பெண் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.கடந்த ஆண்டு நடத்தப் பட்ட தகுதித் தேர்வில் 72 ஆயிரத் துக்கும் மேற்பேட்டோர் தேர்ச்சி பெற்றனர். 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்தது. இந்த நிலையில், ஆசிரியர் நிய மனத்துக்கு வெயிட்டேஜ் மதிப் பெண் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 பட்டதாரி ஆசிரியர்களும், தொடக்கக் கல்வித் துறைக்கு 167 பட்டதாரி ஆசிரியர்கள்,1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 1,816 பேரும் தேர்வுசெய்யப்பட்டன...
Posts
Showing posts from October 7, 2014
- Get link
- X
- Other Apps
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும், 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேல்நிலைப்பள்ளியில் ஒன்பது முதுகலை ஆசிரியர்கள் மற்றும் ஒரு தலைமை ஆசிரியர் என 10 பேர் இருக்க வேண்டும்; உயர் நிலைப்பள்ளியில் ஐந்து பட்டதாரி ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என ஆறு பேர் இருக்க வேண்டும். அதன்படி, தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் 300 பேர், மேல்நிலைப்பள்ளிகளில் ஆயிரம் பேர் என 1,300 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, உடனடியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் பணியிடம் நிரப்ப தாமதமானால், மாணவர் கல்வி நலன் பாதிக்கப்படும்; பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம்...
- Get link
- X
- Other Apps
2 ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களில் 2.5 லட்சம் காலியிடம்’!!! ‘இன்னும் இரு ஆண்டுகளில், அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாகப் போகின்றன’ என, இலவச பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ‘பாரதி கல்வி, வேலை வாய்ப்பு’ இலவச பயிற்சி மைய துவக்க விழா, ஊட்டி ஹில்பங்க் சந்திப்பில் உள்ள சி.ஐ.டி.யு., அலுவலகத்தில், நடந்தது. இந்த மையத்தில், பிரதி ஞாயிறு கிழமைகளில், காலை முதல் மதியம் வரை, தகுதி வாய்ந்த பயிற்றுனர்கள் மூலம், வங்கித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தகுதி தேர்வு, வி.ஏ.ஓ., உட்பட அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியை துவக்கி வைத்து, பயிற்சி மைய மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன இணை செயலர் மகேஷ்வரன் ஆகியோர் கூறியதாவது: பலருக்கு, அரசுப் பணி என்பது, கானல் நீர் தான். அரசுப் பணிக்கான போட்டி தேர்வுக்கு இளைஞர்களை தயார்படுத்த, பயிற்சி வகுப்பு என்ற பெயரில் பெரும் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இது சாத்தியமில்லை என்...