Posts

Showing posts from October 5, 2014
FLASH NEWS : செவ்வாய்க் கிழமை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை 07.10.2014, செவ்வாய்க் கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை. - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு. ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் மூடல். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இளங்கோவன் சேலத்தில் பேட்டி அளித்தார். தமிழகத்தில் 4,500 தனியார் பள்ளிகளும் அக்டோபர் 7 தேதி அன்று இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டமைப்பின் செயலர் இளங்கோ, சேலத்தில் வௌியிட்டுள்ளார்.
கல்வித்துறையில் 4,500 பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் போட்டி: வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நேரடி நியமனம் பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பல லட்சம் பேர் காத்திருப்பதால், இந்த வேலைக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் பாட செய்முறைக்காக, ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில், உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், 4,500 உதவியாளர்கள், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கல்வித்துறை: இதேபோல், பள்ளி துப்புரவாளர் பணியிடமும், கணிசமான எண்ணிக்கையில் நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசாணை, ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், கல்வித்துறை வட்டாரம் கூறுகிறது. இதுகுறித்து, அந்த வட்டாரம், மேலும் கூறியதாவது: ஆய்வக உதவியாளர் பணிக்கு, 10ம் வகுப்பு, அடிப்படை கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு வரை எனில், 35 வயதிற்கு...