TET ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கண்டித்து 8ந் தேதி ஆர்ப்பாட்டம். ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை கைவிடக்கோரி 8–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பொதுச்செயலாளர் கே.சாமுவேல் ராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக பெரும் குளறுபடிகள் நிகழ்ந்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்திலும், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையிலும் பல வழக்குகள் தொடரப்பட்டு பிரச்சினை மேலும் இடியாப்ப சிக்கலாகி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடாமல் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. கல்வியின் தரத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஆசிரியர்கள் இல்லாமலேயே படிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர்.கடுமையான போராட்டங்கள், சட்டமன்றத்தில் வலியுறுத்தல், தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் தலை
Posts
Showing posts from October 2, 2014