Posts

Showing posts from October 1, 2014
அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு.  பக்ரீத் பண்டிகை அக்டோபர் 6ல் கொண்டாடப்படுவதையொட்டி வருகிற அக்டோபர் 6ம் தேதி அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வருகிற திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அனுசரிக்கப்படும். ஏற்கெனவே இரண்டு நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு அன்றைய தினத்தை விடுமுறையாக அறிவித்தது.எனவே பள்ளிகள் அனைத்தும் முன்னதாக அறிவிக்கப்பட்ட முதல் பருவத்தேர்வு விடுமுறைக்கு பின் 6 தேதிக்கு பதில் 7ம் தேதி தொடங்கும்..
TNTET யில் தேர்ச்சிபெற்று பணியில் சேர தாமதிக்கும்புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ? - தினமலர்  உள்ளூரில் காலியிடமின்றி, பிற மாவட்ட அரசு பள்ளிகளை தேர்வு செய்து, நியமன ஆணை பெற்ற பிறகும் பணியில் சேர தாமதிக்கும் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. தமிழகத்தில் டி.இ.டி.,தேர்வு மூலம் தேர்வான இடைநிலை பட்டதாரிகளான 14,700 ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு கடந்த வாரம் வழங்கப்பட்டு, உடனே பணியில் சேரும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.  இவர்களில், 50 சதவீதம் பேர் சொந்த மாவட்டத்தில் பணி வாய்ப்பில்லாததால், வெளி மாவட்டத்திலுள்ள காலியிடங்களை தேர்வு செய்தனர். நியமன ஆணை பெற்ற 25 சதவீத ஆசிரியர்கள் பணியில் சேராமல் தாமதித்து வருகின்றனர். அரசியல், அதிகாரிகள் சிபாரிசில், நியமன உத்தரவை மாற்றி, சாதகமான இடங்களை பெற காத்திருக்கின்றனர். தமிழக முதல்வர் மாற்றத்தால் சாதக இடங்களுக்கான உத்தரவை பெறுவதில் புதிய ஆசிரியர்களுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.  இவர்களுக்கான சிறப்பு பயிற்சியில் 25 முதல் 30 சதவீதம் பேர் வரவில்லை என பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், “கலந்தா...