Posts

Showing posts from September 30, 2014
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? இந்த ஆண்டு 2 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில் , தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் ? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் . கேந்திரிய வித்யாலயா , நவோதயா வித்யாலாயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர “ சி - டெட் ” எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வையும் , இதேபோல் , தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்குச் சேர ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் ( டெட் ) எழுத வேண்டும் . கடைசியாக டெட் தேர்வு 2013- ம் ஆண்டு ஆகஸ்ட் 17, 18- ந் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அதில் ஏறத்தாழ 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர் . அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்ப...