Posts

Showing posts from September 19, 2014
21ம் தேதி நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் வரும் 21ம் தேதி நடைபெறுகின்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்குஆன்லைனில் ஹால்டிக்கெட் விநியோகம் தொடங்கியுள்ளது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றை சிபிஎஸ்இ வரும் 21ம் தேதி நடத்துகிறது.  காலை 9.30 மணி முதல் 12 மணி வரை 2.30 மணி நேரம் தாள் 2 தேர்வும், அன்று மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை 2.30 மணி நேரம் தாள் 1 க்கான தேர்வும் நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் 964 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஹால்டிக்கெட்கள் ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. இதனை www.ctet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துகின்ற குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.  மேலும் ஹால்டிக் கெட்கள் தனியாக விநியோகம் செய்யப்படுவது இல்லை. ஹால்டிக்கெட் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு மையங்களுக்கு 45 நிமிடங்கள் முன்னதாகவே வந்து சேர வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வரும...
தீர்ப்பு ஒத்திவைப்பு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் ‘வெயிட்டேஜ்’ முறையை பின்பற்றுகிறது.  இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியான தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது.  இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த ம...