Posts

Showing posts from September 18, 2014
ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை பட்டதாரி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு சென்னை, : ஆசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு செய்து இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.  மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: பட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில் வெயிட்டேஜ் முறை நடைமுறைப்படுத்தபட்டது குறித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வந்தது.  ஆசிரியர் தேர்வு ஆணையத்தில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற கோவையை சேர்ந்த இளங்கோவன் என்பவர் இதில் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வரும் கலைநேசன் என்பவரும், இவருடன் சேர்ந்து கொண்டு ஆசிரியர் பணி வாங்கி தருகிறேன் என பலரிடம் யி80 லட்சத்துக்கும் மேல் பணம் வசூலித்துள்ளனர்.  இவர்கள் இருவரும் சென்ட்ரல் மற்றும் எழும்பூர...
''82 மதிப்பெண்ணும் 118 மதிப்பெண்ணும் ஒன்றா"-அம்பலம் ஜீனியர் விகடன் ''82 மதிப்பெண்ணும் 118 மதிப்பெண்ணும் ஒன்றா?'''ஆசிரியர்கள் தேர்வில் வெயிட்​டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள்.  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வெயிட்டேஜ் என்ற முறையை தமிழக அரசு அறிவித்து, பணி நியமனத்தில் பல முடிச்சுகளைப் போட்டு சிக்கலை ஏற்படுத்திவிட்டது.  அதனை அடுத்துதான் இந்தப் போராட்டங்கள். ஆசிரியர் தினத்தன்று தங்களின் வாக்​காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை மாநில தேர்தல் ஆணையத்திடம் திருப்பித் தந்து போராட்டம், 14-ம் தேதி பள்ளிக் கல்வி இயக்குநர் சபீதா வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம், 15-ம் தேதி பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முன்பு நெற்றியில் நாமம் போட்டு போராட்டம்... என கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி முதல் வெவ்வேறு. . . மேலும் விளக்கமாக தெர...
தகுதி தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பள்ளிகளில் ஆசிரியராக முடியும்.  மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் 2016ம் ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் ஊதியம் வழங்கபடமாட்டது, என அறிவிக்கப்பட்டுள்ளது.  குறைந்தது ஆண்டிற்கு ஒரு முறையாவது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டிற்கு இதுவரை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட்., முடித்த புதிய பட்டதாரிகள் தகுதி தேர்வு அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.