Posts

Showing posts from September 16, 2014
Flash News: அரசாணை 71 வழக்கின் சுறுசுறுப்பான வாதமும் ; அரசு தரப்பின் அதிரடி பதிலுரையும்...  இன்று காலை 11 அளவில் GO 71, 5% தளர்வு மதிப்பெண் குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 6 முக்கிய வழக்குரைஞர்களும் ,அரசு சார்பாக 3 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள். அமர்வு நீதிமன்றத்தில் நீதியரசர்கள் திரு. அக்கினிகோத்திரி அவர்களும் திரு. சுந்தரேஸ்வர் அவர்களும் வழக்கை விசாரித்தனர். அதன் விவரம் பின்வருமாறு..  ஆரம்பம் முதலே 5% தளர்வு மதிப்பெண்ணுக்கு எதிராக உறுதியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன... ஆனால் இதை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் இது அரசின் கொள்கை முடிவும், மேலும் தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் அறிவுறுத்தலின் படியே கொடுக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலுரைத்தார்...  பின்பு அரசாணை 71 வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது.. வழக்கறிஞர் திரு சங்கரன் அவர்கள் கூறியதாவது "தமிழகத்தில் ஆறு வகையான போர்டில் மாணவர்கள் படித்து வெளியேறுகின்றனர் பின் அனைவருக்கும் எவ்வாறு ஒரே வகையான அளவுகோலை(weightage) நிர்ணயிப்பது சரியாகும்; என வாதாடினார்.  அதற்கு அரசு தரப்ப...
TET வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு விரைவில் ...  இருதரப்பு வாதமும் முடிந்தது.வழக்குரைஞர்கள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இந்த வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவு. தீர்ப்பு இன்னும் 10 வேலை நாட்களுக்குள் வரலாம்.வெயிட்டேஜ் முறையில் மாற்றம் வருமா என்பது நீதிபதிகளின் தீர்பை பொருத்து அமையும்..
TET Today Cause News...(Update News)  இன்று காலை 11 அளவில் TET குறித்த விவாதம் நடைபெறத் துவங்கியது.வாதிகளின் சார்பாக 5 முக்கிய வழக்குரைஞர்களும் அரசு சார்பாக 5 வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதாடினார்கள். அமர்வு நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் திரு.அங்கோத்ரி அவர்களும் திரு.மணிஷ்குமார் அவர்களும் வழக்கை விசாரித்தனர்.  காலையில் 5% தளர்வு முன் தேதியிட்டு வழங்கியது செல்லாது என்று வாதாடிய வழக்குரைஞ்சர்களுக்கு 5% தளர்வு வழங்குவதும் வழங்காததும் அரசின் கொள்கை முடிவு என்று நீதிபதிகள் தீர்க்கமான வார்த்தைகளை உதிர்த்ததாக தெரிகிறது.  அடுத்து G.O 71 க்கு எதிரான வாதம்.இந்த வாதத்தின் போது தமிழகத்தில் பல்வேறு பாடத்திட்டம்(syllabus) பின்பற்றப்பட்டு பல்வேறு வகையான வழியில்(medium-CBSC,STATE BOARD.......like that) கல்வி கற்பிக்கப் படுகிறது.எனவே weightage முறையில் அவர்கள அனைவரையும் ஒரே மாதிரி கணக்கில் கொள்வது தவறு என்று வாதிகளின் வழக்குரைஞ்சர்கள் வாதாடினார்கள்..  அதற்கு மறுப்பு தெரிவித்த மாண்புமிகு நீதிபதிகள், பிற கலந்தாய்வுகளின் பொழுது CBSC க்கு தனியானதொரு கலந்தாய்வும் state board ...