Posts

Showing posts from September 14, 2014
ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்: த.தீ.ஒ.மு. அறிவிப்பு  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ்நாட்டில் ஜூலை 2012ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை மற்றும் அக்டோபர் 2012ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் காலிப் பணியிடங்களுக்கான அறிவிக்கை மற்றும் தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடாமலே தேர்வர்களுக்கு வெளிப்படைத்தன்மையில்லாமல் பணி நியமனங்களை ஆசிரியர் தேர்வு வாரியமும் பள்ளிக்கல்வித் துறையும் வழங்கியது.  குழப்பமான இத்தேர்வு முறையால் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 2012ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பின்னடவு காலிப் பணியிடங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கவும் மற்றும் அரசாணை 252 வெயிட்டேஜ் முறையை இரத்து செய்யக் கோரியும் மனு அளித்தது ஏன் வெயிட்டேஜ் முறையை இரத்து செய்யவேண்டும்? வெயிட்டேஜ் முறையால் கிராமப்புறத்தில் அரசு பள்ளிகளில் படித்த முதல் தலைமுறை மாணவர்கள், மலைகிராமத்தில் ஆசிர
பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் திருமதி சபிதா வீடு முற்றுகை; போலீஸ் தடியடி,பெண் ஆசிரியர் பலத்த அடி மருத்துவமனையில் சேர்ப்பு இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை போலிஸார் தடுத்தனர் .... அதனை தொடர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்திய போராட்டக்கார்ர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது இதில் ஒரு பெண் உட்பட பலர் காயமடைந்தனர் போராட்ட குழு தலைவர் செல்லதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.  அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தற்போது மதுரவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கைது செய்தவர்களை வைத்துள்ளனர் . போராட்டகாரர்களில் ஒருவர்( பி.இராஜலிங்கம்) கூறியது நாங்கள் அமைதியாக போராடினோம் எங்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர் இதில் ஒரு( புவனேஸ்வரி) பெண்னுக்கு பலமாக காயம் ஏற்பட்டுள்ளது அவர் சேப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனக்கு( பி.இராஜலிங்கம்) சட்டை கிழிந்துள்ளது கையில் அடிபட்டு இரத்தம் வந்துள்ளது..  எங்கள் போராட்டத்தை திசை திருப்பிய சிலர் மீதும் குறிப்பாக மணியரசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரைப் பற்ற