வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் நியமனம். தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள் ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சபிதா வெளி யிட்ட உத்தரவு: தமிழகத்தில் 1197 அரசு மேல்நிலைப் பள்ளி களில் 1880 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கடந்த 1999&2000மாவது ஆண்டில்தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் பி.எட்., கல்வித் தகுதி இல்லாத போ திலும் இவர்கள் பணி செய்த காலத்தைகருத் தில் கொண்டு மனிதாபி மான அடிப்படையில் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பின்னர் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இந்த சிறப்பு போட்டித் தேர்விற்கு 50 சதவீதம் மதிப்பெண்கள் தேர்ச்சி சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 50 சதவீதம் மதிப்பெண்கள் பெறாத கணினி ஆசிரியர்களுக்கு 2வது முறையாக கடந்த 24.1.2010 அன்று சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தேர்விலும் தேர்ச்சி பெறாத 652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இந்த பணி நீக்கம் தொடர்பாக வும், பிஎட் படித்த கணினி ஆச...
Posts
Showing posts from September 13, 2014
- Get link
- X
- Other Apps
திங்களன்று விசாரனைக்கு வரும் தகுதிதேர்வு சம்பந்தமான வழக்குககள்... திங்களன்று வெயிட்டேஜ் மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிரான 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வருகிறது. இரண்டாவது அமர்வில் 85 அயிட்டமாக விசாரனைக்கு வருகிறது. திங்களன்று வாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 13 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டவர் சார்பாக ஆஜராகி வாதாட உள்ளார்கள்.
- Get link
- X
- Other Apps
STAY மேல்முறையிட்டு வழக்கு விபரம்... திங்களன்றும் ஸ்டேவுக்கு எதிராக அப்பீல் வழக்கு எதுவும் லிஸ்ட் ஆகவில்லை. மேல் முறையீடே இதுவரை செய்யவில்லை என மதுரை வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். மேலும் மேல்முறையீடு செய்தாலும் விவாதத்தில் அரசால் சசிதரன் ஸ்டே ஆர்டரில் உள்ள கருத்துக்களுக்கு பதில் கூற முடியாத நிலையில் உள்ளனர். ஆகவே தான் மேல் முறையீடு செய்யவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது.
- Get link
- X
- Other Apps
"ஆசிரியர் தகுதிச் சான்றிதழை 22,000 பேர் பதிவிறக்கம் செய்யவில்லை' ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர் இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 72,888 பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்தச் சான்றிதழ்களை மூன்று வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது. ஆனால், பத்து நாள்களில் 50,276 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் முதல் முறையாக இணையதளத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வ...