Posts

Showing posts from September 9, 2014
ஆசிரியர் தகுதித் தேர்வு-வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் செப்., 29ல் உண்ணாவிரதம்?    தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், மாநில அவசர ஆலோசனைக் கூட்டம், தஞ்சையில் நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார்.  பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் செல்வமணி, வேலையில்லா பட்டதாரி தமிழாசிரிய சங்க மாநில தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.  இதனால், பல ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணிபெற முடியாமல் உள்ளது. தற்போது, ஆசிரியர் பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. இதனை, முதல்வர் பரிசீலனை செய்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், பழைய நடைமுறையில் பதிவு மூப்பு முறையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.  கடந்த, 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் நியமனம் பெற்றவர்கள் போக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணி காலியாக உள்ளது. இதில், கடந்த, 2012ம் ஆண்டு ஜூன், 23ம் தேதி
TNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது: திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது.  இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த தகுதி தேர்வு முடிந்த பிறகு மத்திய அரசின் தேசிய கல்வி கவுன்சில் விதிமுறைப்படி மீண்டும் ஒரு தேர்வு நடத்த வேண்டும். ஆனால் தகுதி தேர்வு மதிப்பெண்ணை வைத்து அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்கிறது. இது தவறானது.  நான் கணித பாடத்தில் தகுதி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற்றுள் ளேன். இதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கொடுத்துவிடுவார்கள். இது தவிர சான்றிதழ் சரிபார்த்து உடனே பணி வழங் குவது தவறானது. எனவே தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு அவர்கள் பட்டபடிப்பு மதிப் பெண்ணை வைத்து அல்லது தனி தேர்வு வ
தீவிரமாகும் பட்டதாரி ஆசிரியர்களின்ரேஷன் கார்டு, சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்-Dinakaran News வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை திரும்ப பெறக்கோரி, தற்கொலை முயற்சி, ரேஷன் கார்டு மற்றும் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், பிரச்னையை தீர்க்க வேண்டிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் மவுனமாக இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62ஆயிரம் பேர் உரிய மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் அவர்கள்ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோரில் 500க்கும் மேற்பட்டவர்கள், கடந்தமாதம் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணா விரதம் தொடங்கினர். 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அது குறித்து அரசு தரப்பில் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் செப்டம்பர் 1ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்
ஆசிரியர் தகுதித் தேர்வு-வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் செப்., 29ல் உண்ணாவிரதம்? தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின், மாநில அவசர ஆலோசனைக் கூட்டம், தஞ்சையில் நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் செல்வமணி, வேலையில்லா பட்டதாரி தமிழாசிரிய சங்க மாநில தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித் தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணிபெற முடியாமல் உள்ளது. தற்போது, ஆசிரியர் பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. இதனை, முதல்வர் பரிசீலனை செய்து, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், பழைய நடைமுறையில் பதிவு மூப்பு முறையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். கடந்த, 2010ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களில் நியமனம் பெற்றவர்கள் போக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணி காலியாக உள்ளது. இதில், கடந்த, 2012ம் ஆண்டு ஜூன், 23ம் தேதி சான்றிதழ் சரிப
‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் நூதன போராட்டம் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் பரபரப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்துசெய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் நேற்று காலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிணைந்தனர். அவர்கள், பள்ளி கல்வித்துறையை சுடுகாடாக பாவித்து, பட்டதாரி ஆசிரியர்களை பிணக்கோலத்தில் வைத்து போராட்டம் நடத்துவதற்காக வந்தனர். இதனை அறிந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த வெள்ளைத்துணி மற்றும் மாலை ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பறித்து சென்றனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் தங்கள் வாகனங்களில் ஏற்றி கோயம்பேட்டில் கொண்டு விட்டனர். தங்களின் போராட்டம் தொடரும் என பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.