Posts

Showing posts from September 8, 2014
17வது நாள் தொடர் போராட்டம்: பிணக்கோலமும் சான்றிதழ் ஒப்படைப்பும் இன்றைய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் 17வது நாள்(08.09.2014) தொடர்போராட்டம் காலையில் பத்துமணிக்கு தொடங்கியது. நான்கு ஆசிரியர்கள் பிணமாக போராட்டம் செய்ய மாலை, வெள்ளைத்துணி, நெத்திக்காசு ஆகியவை கொண்டு சென்றனர் அவை போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது... மாலை நேரத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டு சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க. முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் வருவதாக கூறினார்கள். ஆனால் யாரும் வரவில்லை. அனைவரும் உள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
TNTET வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு. சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு. மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றக் கிளையில் தடையானைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வரலாம்.அப்படி வரவில்லையென்றால் நாளை விராசரணைக்கு வரும்..
தகுதித்தேர்வை நீக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: சென்னையில் 29ம் தேதி நடக்கிறது ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை அமல்படுத்தக்கோரி சென்னையில் வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது. தஞ்சையில் ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்க மாநில தலைவர் ராகராமு முன்னிலை வகித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு குளறுபடி உள்ளன. இதனால் பல ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருப்போர் பணிபெற முடியாமல் உள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் பயிற்சியை பெற்றவர்களும், நியமனம் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே பல பள்ளிகளில் ஆசிரியர்களின்றி உள்ளதால் மாணவர்களின் கல்வி தரம் பாதிப்புக்குள்ளாகிள்ளது. இதை முதல் வர் பரிசீலனை செய்து யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பழைய நடைமுறையில் பதிவுமூப்பு முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 20