TNTET - சென்னையில் ஆசிரியர் பயிற்சி பட்டதாரிகள் கைது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையரிடம் மனு அளிக்க வந்த ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் 50க்கும் அதிமானோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதி மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அவர்கள் மனு அளிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அலுவலகத்தில் ஆணையர் இல்லாததால் மனு அளிக்க முடியாத நிலையில் அங்கு கூடியிருந்த பட்டதாரிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
Posts
Showing posts from September 7, 2014
- Get link
- X
- Other Apps
பணி நியமனத்துக்கு தடை: தமிழக அரசின் ‘அப்பீல்’மனு வழக்குவிசாரணை திங்கட்கிழமை நடைபெறுமா? இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழகஅரசு ஐகோர்ட்டில் 'அப்பீல்' செய்துள்ளது. பணி நியமனத்துக்கு தடை இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்றும்,தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல்செய்தனர்.மனுவை விசாரித்த தனி நீதிபதி, 'பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கானகவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமனஉத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது'என்று உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு ஆஜராகி, தனி நீதிபதி
- Get link
- X
- Other Apps
அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? இடியாப்ப சிக்கலில் தவிக்கிறது டி.ஆர்.பி.,– தின மலர் நாளேடு ‘ ஆசிரியர் தகுதிதேர்வில்(டி.இ.டி.,) தேர்ச்சிபெற்று,அரசுப்பணி கிடைக்காமல் காத்திருப்போர்,அடுத்த பணிநியமனத்தில், முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில்தான்,ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்’என,ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. டி.இ.டி.,தொடர்பான,அரசின் அறிவிப்புகள் அனைத்தும், மாறி மாறி வருவதால்,இந்த விவகாரத்தில், முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும்,தங்களை,அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல் ,டி.ஆர்.பி.,சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27ஆயிரம்பேரும்,சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும்,தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில், 74ஆயிரம்பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனெனில்,தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
- Get link
- X
- Other Apps
TET 2013 ஆன்லைனில் சான்றிதழ் வெளியீடு கடந்த 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழை, பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் ஆன்லை னில் டிஆர்பி வெளியிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. இதில், 27ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி அடைந்தனர். அதன்பின், கடந்த ஜன. 10ம் தேதி விடைகளில் மாறுதல் செய்யப்பட்டதில் கூடுதலாக 2 ஆயிரத்து 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக தமிழக அரசு குறைத்ததையடுத்து மேலும், 42 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக உயர்ந்தது. இவர்கள் அனைவருக் கும் பகுதி, பகுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெறும் கட்&ஆப் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியர் பணி வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டு, கட்&ஆப் மதிப்பெண்களும் வெளியி
- Get link
- X
- Other Apps
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடக்குமா?இதுவரை அறிவிப்பு இல்லாததால் சந்தேகம்?? கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும்தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது. என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி.