Posts

Showing posts from September 4, 2014
TET Online Certificates ஒரு வாரம் வரை மட்டுமே இணையதளத்தில் இருக்கும்?  கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் இந்தச் சான்றிதழ்கள் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டு தாள்களிலும் சேர்த்து 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்குமான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதோடு, அதற்கு முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தகுதிச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளாத 180 பேரின் தகுதிச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெர...
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம்  ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம், நாளை நடத்தப்படும் என, போராட்டம் நடத்துவோர் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மட்டும், ஆசிரியர் தேர்வு செய்யப்பட வேண்டும்;  வெயிட்டேஜ் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் 10 நாட்களுக்கும் மேலாக, ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கல்வித்துறை வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர்.  அவர்கள் கூறுகையில், "வெயிட்டேஜ் முறையை எதிர்த்து 5ம் தேதி (நாளை), எங்கள் சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைப்போம். மேலும், வாக்காளர் அடையாள அட்டையை, தேர்தல் ஆணையத்திடம் வழங்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றனர்.
ஆசிரியர் நியமனத் தடைக்கு எதிராக மனு: விசாரிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு  ஆசிரியர்கள் நியமனத் தடைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு நாளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.  தனி நீதிபதியின் உத்தரவு கிடைக்கவில்லை என 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கமளித்தது. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நேற்று தனி நீதிபதி சசிதரன் தடை விதித்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். கூடுதல் செய்தி தனி நீதிபதி திரு.சசிதரன் அவர்களின் தீர்ப்பு நகல் அமர்வு நீதிமன்றத்திற்கு கிடைத்தவுடன் நாளை விசாரணைக்கு வருகிறது.
இடைநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கிய தடையாணையை நீக்க தமிழக அரசு மேல் முறையீடு. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வழங்கிய தடையாணையை எதிர்த்துதமிழக அரசு மேல் முறையீட்டு மனு:கடந்த புதன்கிழமை வெய்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் ஆசிரியர்களை நியமிக்க தடையாணை வழங்கி உத்தரவிட்டது. இந்ததடையாணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. அரசு தரப்பில் திரு.சோமைய்யாஜி ஆஜரகிறார்.
பட்டதாரி ஆசிரியர்கள் கைது-புதிய தலைமுறை  வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி, சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் தினமான நாளை, தங்களது சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  மேலும், வாக்காளர் அடையாள அட்டையையும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திருப்பியளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தேர்வு முறையில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள போதிலும், ஆசிரியர்களின் போராட்டம் 11ஆவது நாளாக நீடிக்கிறது.
தகுதிகாண் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனத்துக்குத் தடை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - தினமலர்  தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களைச் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.  இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், கத்தகுறிச்சியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனு விவரம்: பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ள எனக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பரிந்துரையின்பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு 2010-ஆம் ஆண்டு மே 13-இல் மேற்கொள்ளப்பட்டது.  இருப்பினும், என்னை பணிக்குத் தேர்வு செய்யவில்லை. அந்தச் சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதற்கிடையே, தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. 2011-2012-இல் நடந்த தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். அதன்பிறகும் பணிக்குத் தேர்வாகவில்லை. 2013-இல் நடந்த தகுதித் தேர்வில், 150-க்கு 92 மதிப்பெண்கள் பெற்றேன். ஆசிரியர் பணி நியமனத்துக்கு இது தகுதியான மதிப்பெண் ஆகும்....
டி.இ.டி., சான்றிதழ் இணையத்தில் வெளியீடு - தினமலர்  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. தேர்வர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், 'ரோல் எண்' மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, டி.இ.டி., சான்றிதழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
14,700 ஆசிரியர்கள் நியமனத்தில் உச்சகட்ட குழப்பம்: நீதிமன்ற உத்தரவால் பெரும் கலக்கம்?? பள்ளிக்கல்வித் துறை யில், 14,700 புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில்,உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன கலந்தாய்வு நடத்தலாம்; ஆனால், பணியில் சேர அனுமதிக்கக் கூடாது' என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவால், ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள், கலக்கம் அடைந்துள்ளனர்.  பணி நியமன உத்தரவு பெற்று, பணியில் சேராதவர்களும், பணி நியமன உத்தரவை பெறாமல் உள்ளவர்களும், 'தேர்வு ரத்தாகிவிடுமோ' என, அச்சம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) முறையை கொண்டு வந்ததில் இருந்து, தமிழகத்தில், தொடர் குளறுபடி நடந்து வருகிறது.  காரணம் என்ன?  கடந்த 2012, அக்., 5ம் தேதி, ஆசிரியர் நியமனம் தொடர்பாக, முதல் அரசாணை வெளியானது. அதில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம் செய்யப்பட்டது.அதன்படி, டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், பிளஸ் 2, ஆசிரியர் கல்வி பட்டய படி...