போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேசவேண்டும் கலைஞர் கருணாநிதி வேண்டுகோள்- மாலைமுரசு. சென்னையில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை.. அ.தி.மு.க. ஆட்சி 2011ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து என்ன காரணத்தாலோ, கல்வித் துறையில் ஏராளமான குளறுபடிகள், சமச்சீர் கல்வியில் தொடங்கி, ஆசிரியர்கள்நியமனம் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதுவரை தமிழகத்திலே உள்ள எதிர்க் கட்சிகள் எல்லாம் அவ்வப்போது சுட்டிக் காட்டியும் கூட அ.தி.மு.க. ஆட்சியினர் அதற்குரிய மதிப்பு கொடுக்க மறுக்கின்றனர். தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் பத்து நாட்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிக்கின்றார்கள். நேற்றையதினம் கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்" முறையை ரத்து செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் நான்கு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அனைத்து நாளேடுகளிலும் பெரிதாக வெளி வந்து என்னுள்ளே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.அதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சா...
Posts
Showing posts from September 2, 2014
- Get link
- X
- Other Apps
வெயிட்டேஜ் முறை விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி போலீசார் அதிர்ச்சி - தினகரன் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. கடந்த மாதம் பட்டியல் வௌ�யிடப் பட்டது. அதன்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இவர்கள் பேரணிநடத்தினர். பேரணி, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றது. அப்போது, பேரணியில் கலந்துகொண்ட, நாகை மாவட்டம் சீர்காழி ராதாநல்லூர் பகுதியை சேர்...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பணி அனுபவ மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் அளிக்க வேண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பணி அனுபவ மதிப்பெண் அடிப்படையில்பணி நியமனம் அளிக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த குழந்தைகள்பாதுகாப்புத் திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள்வலியுறுத்தினர். தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்திங்கள்கிழமை நடைபெறவில்லை. இதையடுத்து மனு அளிக்க வந்தவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில்போட்ட மனு: தருமபுரி மாவட்டத்தில் யுனிசெப் நிதியுதவியுடன் செயல்பட்டஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மலைப்பகுதியில் உள்ளஉண்டு உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் கடந்தஜனவரி 2010-ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு மே மாதம் 31-ஆம்தேதி வரையில் 70 பேர் பணியாற்றினோம். உரிய கல்வித் தகுதிகளுடன் நேர்காணல் அடிப்படையில் பணியில் சேர்ந்ததங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள்,யுனிசெப் ஆய்வுக் குழுவினரிடம...
- Get link
- X
- Other Apps
சென்னையில் ஆசிரியர்கள் தற்கொலை முயற்சி : 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிர்ப்பு - தினமலர் ஆசிரியர் பணி நியமனத்திற்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி, விஷம் குடித்த, நான்கு ஆசிரியர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 'முதல்வரை சந்திக்க அனுமதிக்கும் வரை, போராட்டம் தொடரும்' என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் : தமிழகத்தில், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த ஆண்டு தகுதித்தேர்வை நடத்தியது. இதில், பெற்ற மதிப்பெண்கள் மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தகுதித்தேர்வில் அதிக மதிப் பெண் பெற்றும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் குறைவால், பல ஆசிரியர் பின் தங்கும் நிலை ஏற்பட்டது. எனவே, 'வெயிட்டேஜ்' மதிப் பெண் முறையைக் கைவிட்டு, தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய வேண்டும் என, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்த...
- Get link
- X
- Other Apps
பட்டதாரி ஆசிரியர் நியமனம்: நாளை முதல் கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு புதன்கிழமை (செப்.3) தொடங்குகிறது என்று பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10,444 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. தங்களது மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 3-ஆம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4, 5-ஆம் தேதிகளிலும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இதில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்படும் கலந்தாய்வில் மட்டும் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம். கலந்தாய்வில் கலந்து கொள்வோர் தங்களது...