Posts

Showing posts from September 1, 2014
BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை- 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை-Jaya plus சென்னை,கன்னியாகுமரி,நெல்லை, தூத்துக்குடி,மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஆசிரியர் பணி இடங்கள் காலி இல்லை.எனவே மேற்கண்ட மாவட்டத்தினர் 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை. 4.09.2014 ,5.09.2014 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவும்.
TET வெயிட்டேஜ் முறைக்கு எதிராக நடந்த பேரணியில் 5பேர் தற்கொலை முயற்சி ... TET வெயிட்டேஜ் முறைக்கு எதிராக இன்று சென்னையில் நடந்த பேரணியில் 5பேர் தற்கொலை முயற்சி.அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை, தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடிஉள்பட தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆன்லைனில் கலந்தாய்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடக்கக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,649 இடைநிலை ஆசிரியர்களுக்கும், 167 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு ஆன்லை னில் நடத்தப்பட இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி யிடங்களுக்கு இன்றும் (திங்கள் கிழமை), வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்குநாளை யும் (செவ்வாய்) கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங் களுக்கு 4-ம்தேதியும் கலந்தாய்வு ...