Posts

Showing posts from August 28, 2014
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு. முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள்-30.08.2014 வேறு மாவட்டம் -31.08.2014 இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள்-1.09.2014 வேறு மாவட்டம் -2.09.2014 பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள்-3.09.2014 வேறு மாவட்டம் -4.09.2014 வேறு மாவட்டம் -5.09.2014
7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர். தமிழக அரசு செய்திக் குறிப்பு. மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன.  தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.   இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் கல்வி துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு TET தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள் - தினத்தந்தி. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடை நிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றை கொண்டுவெயிட்டேஜ் மதிப்பெண் தயாரிக்கபப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு அவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,649 பேர் ஆசிரியர்கள் ...
7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார்-Dinamani பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28) வழங்குகிறார். இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக நியமிக்கப்படுகின்றனர். முதுநிலைப் பட்டதார...
12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்!!! பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம்வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார். பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில்சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.