TNTET : போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள் 2013-ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் மேல் பெற்ற ஆசிரியர்கள் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எங்களின் பணிவான வேண்டுகோள். *ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வினைப் போல் தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும். காரணம்: Weightage என்பது +2 மதிப்பெண்ணை= 10 B,SC/B.Aமதிப்பெண்ணை=15 B,EDமதிப்பெண்ணை=15 தகுதிதேர்வுமதிப்பெண்ணை=60 மொத்தம்=100என கணக்கிடுவது. 1.தமிழக அரசு மற்றும் மத்திய அரசு நடத்தும் TNPSC,TRB & CTET,UPSC போன்ற தேர்வுகளுக்கு தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. 2.+2, B.SC / B.A , B.ED ஆகிய படிப்பானது பத்து வருடத்திற்கு முன்பு எடுத்த மதிப்பெண் மிககுறைவு[மதிப்பிடுமுறை]ஆனால் தற்போழுது எடுக்கும் மதிப்பெண் மிக ஆதிகம்,ஓவ்வொருவரும் வெவ்வேறு கால கட்டத்தில் படித்துள்ளனர். 3.+2 VOCATIONAL பிரிவில் செய்முறைதேர்வில் 440 மதிப்பெண் பெறும் அவர்கள் சராசரியாக தேர்ச்சி பெற்றாலே 900 மதிப்பெண் பெறுகின்றனர
Posts
Showing posts from August 24, 2014
- Get link
- X
- Other Apps
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது . பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர். மாவட்டங்களில் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, துறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை, அதில் நிலுவையில் உள்ளவை போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்," மாவட்ட வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் அதில் நியமிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது,என்றார்.