Posts

Showing posts from August 21, 2014
TNTET :இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம். ஆசிரியர் பணி நியமனம்: இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம். தொடக்கக் கல்வித்துறையில் 845 பின்னடைவு காலியிடம், 830நடப்பு காலியிடங்கள் உள்ளன.சிறுபான்மை மொழிகளில் 102 பின்னடைவு காலியிடம், 72 நடப்பு காலியிடங்கள் உள்ளன.கூடுதல் தகவல்களுக்கு trb.tn.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
TET பட்டதாரி ஆசிரியர்கள் கைது. 4வது நாளாக சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை. ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவும் வலியுறுத்தல்.
104-க்கு இல்லை; 82-க்கு ஆசிரியர் பணியா? தி இந்து ‘உங்கள் குரலில்’ டி.இ.டி. தேர்வாளர்கள் புகார் கடந்த வாரம் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவில் 104 மதிப்பெண் எடுத்த மூத்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை எனவும், 82 மதிப்பெண் எடுத்த புதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாகவும் தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் புகார் தெரிவித்தனர். 2013 ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் மட்டும் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10,736 பேர் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பணிக்கு தேர்வாகி உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 104 மதிப்பெண், 99 மதிப்பெண் எடுத்த பலருக்கு ஆசிரியர் பணி கிடைக்காத நிலையில், 82 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாக தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் தங்களது மனக்குமுறலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறும்போது, கடந்தமுறை வரை நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண் வரை எடுத்தவர
டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்? நெல்லையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆசிரியர் நியமனத்தில் 5 சதவீத மதிப்பெண் விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டா யம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஆசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு சோதனைகளும், தடைகளும் வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுக்கு பின் பல்வேறு காரணங்களுக்காக தொரடப்பட்ட வழக்குகளில் சிக்கி, தேர்வு முடிவுகளை அறிவிப்பதிலும், தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடுவதிலும் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. விடைத்தாள் வழக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் வழக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை தொடர்பான வழக்கு என டிஆர்பி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் வழக்குகளை சந்திக்க வைக்கின்றன. இதனால் கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள் நியமன நடைவடிக்கைகள் முழுமை பெறாமல் முடங்கி வருகின்றன. இது மாணவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெர