Posts

Showing posts from August 17, 2014
ஆசிரியர் நியமனத்தில் weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம். உரிமை பறிபோவதர்க்குள், நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று, நம் உரிமையை மீட்க அனைவரும் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாரீர்~வாரீர்....... காவல்துறை இடம் அனுமதி பெறப்பட்டுவிட்டது. இடம்:வள்ளுவர்கோட்டம்,சென்னை நாள்: 18.08.2014 -திங்கள். நண்பர்களே,இந்த போராட்டம் நம்வாழ்வில், அரசு ஆசிரியர் பணியை பெறுவதற்க்கான இறுதி கட்டமுயற்சி. முக்கிய காரணங்கள்...... GO 71படி, weightage அடிப்படையில் ஆசிரியர் நியமனம்என்பது,முற்றிலும் ஏற்றதாழ்வுள்ள ஒன்றாகும். எப்போதோ படித்த கல்வியை இப்போதுள்ள கல்விமுறை மற்றும் மதிப்பெண் உடன் ஒப்பிடுவது நியாயமற்ற முறையாகும். முதல் GO வின் படி 90மதிப்பெண் பெற்று,சான்றிதழ் சரிபார்த்து,அடுத்தவாரம் வேலை கிடைத்துவிடும் என ஆவலுடன் இருந்த வேலையில், 5%மதிப்பெண்தளர்வு என கூறி 82-89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்புதந்தீர்கள்,முதலில் ABOVE 90 எடுத்து CV முடித்த எங்களுக்கு பணிவழங்கிவிட்டு மீதம் இருந்தால்...
TET க்கு இடைக்காலத் தடை,BRTE வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு. அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் திரு.மா.இராஜ்குமார் அவர்கள் BRTE ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டுமென்று கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தரப்பில் BRTE ஆசிரியர்கள் குறித்து முடிவெடுக்க அரசுக்கு அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டது. அதற்கு நீதிபதி அவர்கள் "ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு" சம்பந்தமாக ஏற்கனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது அக்டோபர் 7 ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பதில் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, பள்ளி கல்வித் துறையிடம் ஒப்படைப்பதில், டி.ஆர்.பி.,காலதாமதம் செய்து வருகிறது. இதனால், ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 10ம் தேதி, 10,500 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 1,400 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதன்பின், தேர்வு பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை, பள்ளி கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்க வேண்டும். இதன்பின் தான், பணி நியமன பணியை, பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள முடியும். ஆனால், தேர்வு பட்டியல் வெளியிட்டு ஒரு வாரம் முடிந்தும், தேர்வு பெற்றவர்களின் ஆவணங்களை, பள்ளி கல்வித்துறையிடம், டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை.இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:இதுவரை, டி.ஆர்.பி.,யிடம் இருந்து ஆவணங்கள் வரவில்லை; வந்தால் தான், பணி நியமனம் குறித்து நாங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும். விரைவாக, ஆவணங்களை வழங்கினால், இந்த மாதத்திற்குள்ளாகவே, அனைவரையும் பணி நியமனம் செய்து விடுவோம். இவ்வா...
ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்", திரு.இராஜ்குமார் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார் அவர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு தரப்பில் அக்டோபர் மாதம் வரை கால அவகாசம், அதற்கு நீதிபதி அவர்கள் "ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு "ஏற்கெனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து அமுலில் இருக்கும்" என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள்: மறுஆய்வு மனு திங்களன்று(18.08.14) விசாரணை TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன இதற்கிடையில் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு 21 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மறுஆய்வு செய்ய TRB மனுதாக்கல் செய்துள்ளது. நீதியரசர் ஆர்.சுப்பையா சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் இருவாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். தற்போது சில வழக்குகளில் எதிர்மனுதாரர்கள் பதில்மனு செய்துள்ள நிலையில் அம்மனுக்கள் நீதியரசர் சுப்பையா அவர்களுக்கு முன் திங்களன்று(18.08.14) விசாரணைக்கு வருகின்றன.