12,600 பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் விரைவில் நியமனம் அமைச்சர் வீரமணி தகவல். திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரி யர்கள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி கூறினார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் உள்ள தனியார் பல் கலைக்கழகத்தில்திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது. கூட்டத்திற்கு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் வீரமணி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வி துறை முதன்மைச் செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி,மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் வீரமணி பேசியதாவது: கல்விக்காக அனைத்து திட்டங் களையும் விலையில்லாமல் முதல்வர் செய்து வருகிறார். குறிப்பாக, கட்டணமில்லா கல்வி, விலையில்லா மடிக் கணினி, புத்தகம், பை, வண்ண கிரையான்கள், சீருடை, பேருந்து பயண அட்டை, உயர் கல்விக்கு ஊ...
Posts
Showing posts from August 14, 2014
- Get link
- X
- Other Apps
பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியமர்த்தக் கோரி, தஞ்சையில், பி.எட்.,கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பனகல் கட்டிடம் முன் நடந்த ஆர்பாட்டத்துக்கு, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், நவீன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களில் பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள பட்டதாரிகளை பணியமர்த்தவேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில், 6 முதல், 10வது வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.