ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்-Dinakaran News ஆங்கில வழிக்கல்விக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழக அரசை வலியுறுத்துகின்றனர். தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு யூனியன் எல்லையிலும் தலா 5 பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. திட்டத்தை விரிவிப்படுத்த தொடக்கப் பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி திட்டம் கடந்த ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளிகளிலும் துவங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் 1,141 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்உள்ளன. கோவையில் கடந்த 2 ஆண்டுகளில் 249 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 5,201 மாணவ, மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர்.2014-15ம் கல்வியாண்டில் புதிதாக 92 பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்பட்டது. இதில் 5,835 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர். கோவையில் ஆங்கில வழிக்கல்வியில் கடந்த 2 ஆண்டுகளை விட, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக்கல்வியில் மாணவர் சேர்க...
Posts
Showing posts from August 13, 2014
- Get link
- X
- Other Apps
ஒரே நேரத்தில் PGTRB, TNTET PAPER I & PAPER II, 3 ஆசிரியர் பணிக்கு தேர்ச்சிபெற்று ஆசிரியை சாதனை : முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தேனி ஆசிரியை சாதனை படைத்துள்ளார்.கடந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.ஆர்.பி தேர்வு, ஆகஸ்ட் 17ம் தேதி இடைநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட் 18ம் தேதி பட்டதாரி ஆசிரியர் தகுதிக்கான 2ம் தாள் தேர்வு நடந்தது. தேர்வுகள் முடிந்து வெயிட்டேஜ் முறை கணக்கிட்டு பலமாதங்கள் ஆன நிலையில் பணிநியமன அர சாணை உத்தரவுக்காக பல்லாயிரம் ஆசிரியர்கள் காத்திருந்தனர். நேற்று முன்தினம் இடைநிலை ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் மற் றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன உத்தரவுக்கான அர சாணை இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது. இதில் தேனி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்த தனலட்சுமி இடை நிலை ஆசி ரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர் பணிக் கும் தேர்வாகி உள் ளார். ஒரே நேரத்தில் 3 ஆசிரியர் பணிக்கு...