Posts

Showing posts from August 12, 2014
தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஏன்? ஆசிரியர் தேர்வுவாரியம் விளக்கம்  தமிழ் பாடத்திற்கு, குறைவான இடங்கள் ஒதுக்கீடு செய்தது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்)வட்டாரம் கூறியதாவது:காலி பணியிடங்களில், 50 சதவீதத்தை, பதவி உயர்வு மூலமும், 50 சதவீதத்தை,நேரடி பணி நியமனம் மூலமும், கல்வித் துறை நிரப்புகிறது. இதில், தமிழ் பாடத்திற்கு மட்டும், 66.6 சதவீதஇடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 33.3 சதவீத இடங்கள் மட்டுமே, நேரடியாகநியமிக்கப்படுகின்றன. இந்த முறையினால் தான், தமிழ் பாடத்திற்கு, இடங்கள் குறைவாக வருகின்றன.இவ்வாறு,டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை. *.BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை  *.முன்னதாக பட்டதாரி பணியிடங்களுக்கு பணி மாறுதல் நியமன ஆணை பெற்றவர்களை மாணவர்களின் நலன் கருதி, உடனடியாக விடுவித்து பணியில் சேர அனுமதிக்குமாறு கோரிக்கை.   *.2014-15 ஆம் கல்வியாண்டில் 1000 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளுக்கு பணிமாறுதல் செய்ய கோரிக்கை.
முதுகலை ஆசிரியர் 140 பேர் நியமனம் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற, 140 முதுகலை ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டு, முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு நடந்தது. இதில், வரலாறு, வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களை, தமிழ் வழியில் படித்து, போட்டி தேர்வை எழுதி தேர்வு பெற்ற, 140 பேர், ஆறு மாதங்களுக்கு மேலாக, பணி நியமனமின்றி தவித்து வந்தனர்.  இவர்கள், நேற்று, கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து, பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர்.'ஒரு வாரத்திற்குள், 140 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்நிலையில், 140 பேருக்கும், பணி நியமன உத்தரவுகள், அஞ்சல் மூலம் அனுப்பும் பணி, நேற்றே துவங்கியதாக, துறை வட்டாரம் தெரிவித்தது. 15ம் தேதிக்குள், அனைவருக்கும், பணி நியமன உத்தரவு கிடைத்துவிடும்என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது