1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் 150 அரசு பள்ளிகளுக்கு தேவையான 1,300 ஆசிரியர் காலியிடங்களுக்கு செப்டம்பரில் கவுன்சிலிங் நடத்தும் திட்டம் உள்ளதாக, கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடப்பு கல்வியாண்டில் (2014-15) ஒவ்வொரு மாவட்டத்திலும் தரம் உயர்த்துவதற்கு தகுதியான அரசு உயர்,மேல்நிலை பள்ளிகளின் பட்டியல்களை மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள் தயாரித்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியது. இந்த பட்டியலின் அடிப்படையில் 100 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாகவும், 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாகவும் தரம் உயர்த்தப்படும் என, சட்ட சபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு 3 அல்லது 5 பள்ளி மேல்நிலையாகவும் 2 உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர வாய்ப்பு உள்ளது. மேல்நிலைக்கு தலைமை ஆசிரியர் உட்பட 10 புதிய காலியிடமும், உயர்நிலையில் தலைமை ஆசிரியர் உட்பட 6 புதிய ஆசிரியர்களும் என, 1,300 பேர் நியமிக்கப்படுவர். கவுன்சிலிங் மூலமே தரம் உயரும் பள்ளிகளின் காலியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை
Posts
Showing posts from August 9, 2014
- Get link
- X
- Other Apps
2,944 விஏஓ பணியிடங்கள் நிரப்பப்படும் தமிழகத்தில் நடப்பாண்டில் 2,944 கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ)பணியிடங்கள் நிரப்பப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். சட்டப்பேரவையில் வருவாய்த்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து வெள்ளிக்கிழமை பேசுகையில் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருவாய் உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்குவதற்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, 8 ஆண்டுகளாகக் குறைக்கப்படும். அதுபோன்ற பதவி உயர்வுக்கான மொத்த ஒதுக்கீடு 10-ல் இருந்து 30 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 3,672 முன்னாள் விஏஓ-க் களுக்கு வழங்கப்படும் ரூ.1,500 ஓய்வூதியம், 2 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் பெறும் 852 முன்னாள் கிராம அலுவலர் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,000-த்தில் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள 2,944 விஏஓ பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று மற்றும் 10 வருடங்கள் கிராம உதவியாளராக பணிமுட