TRB PG :இன்னும் சில வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியானதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பாடங்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் 2013 ஜூலை 21ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக நடந்த வழக்கின் தீர்ப்பின்படி 2014 ஜனவரி 17ம் தேதி திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரி பார்ப்பு நடத்தப்பட்டது. அதன்படி தற்காலிக தெரிவுப் பட்டியல்கள் வெளியிடப்பட்டன. அதில் விலங்கியல், புவியியல், மனையியல், விளையாட்டு ஆசிரியர் கிரேடு&1, உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டது. மற்ற பாடங்களுக்கான பட்டியல்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தபிப்ரவரி மாதம் அறிவித்து இருந்தது. இதையடுத்து, முதுநிலை பட்டதாரிகள் தெரிவுப் பட்டியலை வெளியிட கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 60க்கும் மேற்பட...
Posts
Showing posts from August 5, 2014
- Get link
- X
- Other Apps
இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ளநிலையில் கல்விஅதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508பேரை தேர்வு செய்கிறோம்.இந்தபட்டியல் ஓரிருநாட்களில் வெளியாகும்.
- Get link
- X
- Other Apps
பள்ளி, தொடக்க கல்வித்துறையில் கூடுதல் பணியிடங்கள் - தினகரன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது தொடர்பாக கூடுதல் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுப் பட்டியல் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. வெயிட்டேஜ் மதிப்பெண் போட்டதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் அது குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் நேரில் ஆஜராகி தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை ஆகிய இரண்டிலும் 10,726 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. தற்போது, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கொடுத்த பட்டியலின் படி கூடுதல் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது. இதன்படி பள்ளிக் கல்வித்துறையில் ஆங்கிலம் 43, கணக்கு 82, இயற்பியல் 55, வேதியியல் 55, தாவரவியல் 24, விலங்கியல் 24, வரலாறு 67, புவியிய...
- Get link
- X
- Other Apps
TET இறுதி பட்டியல் வெளியிட்ட பின்பே, PG TRB இறுதிபட்டியல் வெளியிடப்படும்-Dinamalar முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, பல மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், நேற்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இறுதி தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கோஷம் எழுப்பினர். பின், சில தேர்வர்கள், டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளியை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதம் தேர்வு நடந்தது. ஓர் ஆண்டை கடந்த நிலையிலும், இன்னும், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடவில்லை. 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய நடந்த தேர்வில், தமிழ் ஆசிரியருக்கு மட்டும், தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், பணி நியமனமும் நடந்துவிட்டது. மற்ற பாடங்களுக்கு, இறுதி பட்டியல் வரவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு, இறுதி பட்டியல், வ...