Posts

Showing posts from August 3, 2014
ஆகஸ்ட் 4-இல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.  ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.
புலி வருது! புலி வருது!... - பழைய கதையை சொல்லும் டி.ஆர்.பி.--தினமலர் சென்னை: அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் பட்டியலை வெளியிடுவதில், இதோ, அதோ என்று டி.ஆர்.பி. தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இதனால், ஆசிரியப் பட்டதாரிகள் ஆவேசமும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் TET தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு மதிப்பெண் சலுகை மற்றும் பல்வேறான வழக்குகள் என்று இழுத்துக்கொண்டு சென்றதால், அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்வுசெய்து பணியமர்த்துவதில் தொடர்ந்து சிக்கல் நிலவியது. மதிப்பெண் பிரிவினருக்கான இடஒதுக்கீடு சலுகையால் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே, புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகம் செய்யும்படி, தேர்வர்கள் தாக்கல் செய்த ஒரு வழக்கில், உயர்நீதிமன்றம், அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, புதிய வெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஒருவழியாக நீதிமன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வந்த நிலையில், புதிய வெயிட்டேஜ் முறைப்படி, தேர்வெழுதியவர்கள் ஒவ்வொருவரும் பெற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் விபரங்கள் TRB இணையதளத்தில் வெளிய...
TNTET- பட்டியலை வெளியிடாமல் டி.ஆர்.பி குழப்பம் - தினமலர் ஆயிரம் பேரை தேர்வு செய்யும் பணியை, ஒரு வாரத்திற்கு முன்பே, டி.ஆர்.பி., முடித்து விட்டது.இதுகுறித்து, இரு வாரங்களுக்கு முன், நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர், 'ஜூலை, 30ம் தேதி, புதிய ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்படும்' என்றார். பின், ஏற்கனவே அறிவித்த தேதி அல்லது ஓரிரு நாள், தள்ளிப் போகலாம் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது. தவம்:டி.ஆர்.பி.,யின், இந்த தொடர் அறிவிப்புகளால், தேர்வெழுதியவர்கள் மத்தியில், பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. 'நாம் தேர்வு பெறுவோமா?' என, ஒவ்வொருவரும், பட்டியல் வெளியாகும், www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தை பார்த்தபடி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'ஆக., 1ம் தேதி, பட்டியல் வெளியாகும்' என, டி.ஆர்.பி., வட்டாரம் உறுதியாக தெரிவித்தது. இதனால், நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை, கம்ப்யூட்டர் முன், தேர்வர்கள் தவம் இருந்தனர்.ஆனால், கடைசிவரை பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. டி.ஆர்.பி.,யின், இந்த சொதப்பல் காரணமாக, தேர்வர்கள் ஏமாற்றமும...
பகுதி நேர ஆசிரியர்களுக்குரூ.2,000 சம்பள உயர்வு - தினமலர் தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அரசு முடிவு செய்து உள்ளது.இத்திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டில் ஓவியம், கைத்தறி, உடற்கல்வி, கணினி உட்பட்ட பாடங்களுக்கு பகுதிநேர பட்டதாரி ஆசிரியர்களாக 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது; வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் மட்டும் இவர்கள் பணி புரிகின்றனர். பகுதி நேரம் என்றாலும் அரசு நியமனம் என்பதால் தனியார் பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த ஆசிரியர்கள், அதை ராஜினாமா செய்து விட்டு, இப்பணியில் சேர்ந்தனர். சம்பளம் மிக குறைவாக இருப்பதாகவும், இதை உயர்த்தி வழங்கவும், முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இவர்களுக்கு 1.4.2014 முதல் 7,000 ரூபாய் சம்பளம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 'விரைவில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்' என கல்வி அதிகாரி ஒருவர் கூறினார்.