Posts

Showing posts from August 1, 2014
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியுமா?  சட்டசபையில் கேள்விநேரத்தின்போது, உறுப்பினர் பாலபாரதி (மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டு), கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பி.எட். எம்.எட். முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு அரசு ஆவணம் செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.   இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்து, கூறியதாவது: அத்தகைய பிரிவு மாணவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவது குறித்து முதல் அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இனிவரும் காலங்களில் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்தும் முதல் அமைச்சரின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித செய்திகள்- தேர்வர்கள் குழப்பம் இடை நிலை ஆசிரியர் தேர்வுப்பட்டியல் குறித்து பலவித பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.  4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை, இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. -dinamalar  இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. -Tamil Hindu  இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்கள் அநேகமாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனவும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.-dinamani  மேற்கண்ட பத்திரிகைச் செய்திகளால் தேர்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,112 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் - ஜெயலலிதா அறிவிப்பு.. சென்னை, அரசுகல்லூரிகளில் காலியாக உள்ள 1,112 உதவி பேராசிரியர்கள்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.  அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,112 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார். அரசு ஆசிரியர் கல்வியல் கல்லூரி மற்றும் அரசு கலை கல்லூரிகளில் நியமிக்கப்படுவார்கள் என்றும் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான தேர்வு பட்டியலை ஆகஸ்ட் 13 அல்லது 14-ம் தேதி வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.  பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் அதிகரிப்பு:இறுதி தேர்வு பட்டியல் இன்று வெளியீடு. பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப் படையில் தேர்வு செய்யப்படு வார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.  மேலும்,ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகள், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து காலியிடங்கள் வரும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகரிக்கும்என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில், இறுதி தேர்வு பட்டியலையும், அதிகரிக்க வுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை யையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்ப...
15 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் இன்று வெளியீடு..!!-Dinamalar  பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள,15 ஆயிரம் புதியஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), இன்று, இணையதளத்தில் வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 43 ஆயிரம் பேரில் இருந்து, 10,726 பட்டதாரி ஆசிரியரும், 4,000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று, கூடுதலாக, 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி.,க்கு வழங்கப்பட்டதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.  எனவே, 11,226 பட்டதாரி ஆசிரியர், 4,000 இடைநிலை ஆசிரியர் என, 15,226 பேர் அடங்கிய, இறுதி பட்டியலை,இன்று காலை அல்லது பிற்பகலில், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட உள்ளது. முதலில் அறிவிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை தமிழ் 772, ஆங்கிலம் 2,822, கணிதம் 911, இயற்பியல் 605, வேதியியல் 605, தாவரவியல் 260, விலங்கியல் 260, வரலாறு 3,592, புவியியல் 899, மொத்தம் 10,726.